Tamil News

Tamil News

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபர் அறிவிக்க வேண்டும் TRAI Advice :


ஓர் ஆண்டு வேலிடிட்டி கொண்ட டேட்டா ஆஃபரை அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் அளிக்க வேண்டும் என்று ட்ராய் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளிக்கும் ரிசார்ஜ் ஆஃபர்களுக்கான அதிகபட்ண வேலிடிட்டி 90 நாட்களாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு வருடத்திற்கு உரிய டேட்டா ஆஃபர்களை அளிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (ட்ராய்) கோரிக்கை அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ட்ராய் ஏற்றுக்கொண்டுள்ளது.
அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரே ஒரு டேட்டா ஆஃபரை மட்டுமாவது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் அளிக்க வேண்டும். அதுவும் அந்த ஆஃபரைப் பெற, ஒரே ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்க வேண்டும் என்று ட்ராய் அறிவித்தது.

தொலைத்தொடர்பு நிறுனங்களின் கோரிக்கையை ஏற்று ட்ராய் அனுமதி வழங்கிய பின்னரும் எந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமும் ஓராண்டு டேட்டா ஆஃபர் எதையும் அறிவிக்கவில்லை.
இதனால், விரைவில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ட்ராய் நிபந்தனைகள் படி, ஒரே ரீசார்ஜ் மூலம் ஒரு வருடத்திற்கான இன்டர்நெட் பயன்பாட்டு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆஃபருக்கான அனுமதி கேட்கப்பட்ட பின்பே ட்ராய் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது என்றும் இருப்பினும் புதிதாக இன்டர்நெட் பயன்படுத்துவோரை கருத்தில் கொண்டே இந்த அனுமதி வழங்கப்பட்டது என்றும் ட்ராய் கூறியுள்ளது.

INTEL vs AMD

INTEL_X9
பிராசசரை வெளியிட்ட நிலையில் #AMD பிராசசார் கம்பெனி புதியதாக ஒரு ப்ராசசரை உருவாக்கியுள்ளது.அதன் பெயர் #ரைசன் (Ryzen). Zen-core architecture யினை அடித்தலமாக உருவாக்கப்பட்டது.இந்த பிராசசார் High-end PC users பொருந்தும்.4 cores/8 threads GPU-வை மையமாக கொண்டு game விளையாடும் பிரியர்களுக்காக 4K resolution மாற்றம் செய்து திரையிடும்.4 cores/8 threads இதில் 16 cores,32 threads மற்றும் quad channel DDR4 RAM memory யினை கொண்டிருக்கும்.அனைத்து மாடல்களும் அதாவது
peripherals 64 PCIe 3.0 high-speed வேகத்திலும் நான்கு கிராஃபிக்ஸ் கார்டுகளும் இணைத்து கொள்ளலாம்.AMD Ryzen பிராசசார் மற்ற பிராசசார்களை பின் தள்ளி முன் வரிசையினை பிடிக்கும் என் எதிர்பார்கப்படுகிறது.ஆனால் இதுவரை இதன் வேகம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை ஆகினும் வதந்திகளாக இதன் விலை சுமார் 849 டாலராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு

இந்தியாவிற்கான வர இருக்கும் நிதி நிலை அறிக்கையில், பிராட்பேண்ட் இணைப்பிற்கான சலுகைகள் அதிகம் இருக்க வேண்டும் என, இந்தப் பிரிவைக் கண்காணித்து வரும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில், இந்தியாவில், 25% நகர மக்களும், 4% கிராம மக்களுமே பிராட்பேண்ட் இணைய இணைப்பினைக் கொண்டிருப்பார்கள். பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற பயனாளர்களில், 75% பேர் நகரங்களில் வசிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 4.1% பங்கு, பிராட்பேண்ட் இணைய இணைப்பினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இதன் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 29 லட்சம் சதுர மீட்டரில் வாழும் 130 கோடி மக்களை இணைக்க, பிராட்பேண்ட் இணைப்பு அவசியம் என்பதுவும் உறுதியாகிறது.
பிராட்பேண்ட் இணைய இணைப்பில் முதல் இடம் பெறும் விஷயம், அதற்கான கட்டணமும், சாதனங்களின் விலையும் ஆகும். தற்போது இணைப்பிற்கான சேவைக் கட்டணத்தில் 15% சேவை வரி மற்றும் சில வரிகளைப் பயனாளர்கள் செலுத்த வேண்டியதுள்ளது. இதனைப் பெரும் அளவில் குறைக்க வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரி மாற்ற முறையில், சேவைக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு இந்தப் பிரிவில் கவனம் செலுத்த வேண்டும்.
2016 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில், இணைய இணைப்பு பெற்றவர்கள் 47.7 கோடி பேர். இவர்களில், பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 19.2 கோடி பேர். இவர்களில், வயர் வழி இல்லாத பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்கள் 17.4 கோடி பேர். 1.8 கோடி பேர் வயர் வழி இணைப்பு பெற்றவர்கள். 2018-~19ல், இந்திய மக்களில் 35% பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல், 53% பேர் இணைப்பினைப் பெற்றிருப்பார்கள். அப்போது, பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற, கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை, நகரத்து பயனாளர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கினை ஈட்டிட, கிராமப்புற மக்களிடையே, இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு குறித்த கல்வியறிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான செலவினங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.
தற்போது, தொலை தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதில்லை. இதனைக் கொண்டிருக்கும் வருமானவரிச் சட்டத்தின் 35(2AB) பிரிவினை இந்நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.
தொலைதூரக் கிராமப்புறங்களில் இயங்கும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்கள், மக்களுக்கு இணையம் குறித்த கல்வியறிவினைப் பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்கையில் அரசு அவற்றை அறிந்தேற்பு செய்து, சலுகைகள் அளிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சாதனப் பயன்பாட்டில், பெரும் அளவில் சலுகைகள் தரப்படுகின்றன.
ஏற்கனவே, இந்திய அரசு, கிராமப்புறங்களில், குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்குப் பல சலுகைகள் அளித்தது. அதே போல, கிராமப் புற இணையக் கல்வியைப் பரப்புவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம்.
தற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் 'பொருட்கள் மற்றும் சேவை வரி' அமைப்பினை மாற்றி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அனைத்துமே, டிஜிட்டல் வழிமுறையில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நிறைவேற்ற, கிராமப் புற மக்களிடையே இணையப் பயன்பாடு பரவலாக இருக்க வேண்டும். எனவே, அரசு இணையம் மற்றும் பிராட்பேண்ட் பயன்பாட்டினை நாடெங்கும் மக்களிடையே கொண்டு செல்ல, இந்த நிதி நிலை அறிக்கையில் பல சலுகைகளைத் தர வேண்டும் என இந்தப் பிரிவில் செயல்படும் ஆர்வலர்களும் அலுவலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள், 100% மக்களை பிராட்பேண்ட் பயன்பாட்டிற்குக் கொண்டு வர, முதலீடு செய்வதில் முனைந்துள்ளன. இந்தியாவில், 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் பொருளாதார வளர்ச்சி முழுவதும் வேளாண்மையைச் சார்ந்து இருந்தது. தற்போது, சேவைப் பிரிவுகள், 62% பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. எனவே, சேவைப் பிரிவுகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பாய் இயங்கி வரும் பிராட்பேண்ட் செயல்பாட்டிற்கு, அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது. தேசிய பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து செயல்படுத்திட, பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் சமுதாய, பொருளாதார இடவெளிகளை நிரப்பிட, அறிவுசார் பிரிவுகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் நம் நாட்டின் நிலையை வளப்படுத்தி வலிமையாக மாற்றிட, வரும் நிதி ஆண்டில், அரசு பெரும் அளவில் பிராட்பேண்ட் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Tips :

மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத்
தடுக்கவும்